துரோகிகள் அதிகமாக இருக்கும் டொரோண்டோ வாழ் தமிழ் மக்களின் நினைப்பு என்னதான் என்று தெரிந்துகொள்வதற்கே ஊடக ஆய்வாளர்கள் தேவைப்படுகிறது. சரி அந்த விசமிகளை விடுவோம். இந்த ஊடகவிலாளர்கள் உண்மையில் தேச உணர்வானவர்களா? எத்தனை மணித்தியாலங்கள் நம் தேச பற்றுள்ள இளையோரால் முழு மூச்சுடன் சில மாதங்களாக இரவு பகல் என்று பார்க்காமல் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பார்கள்? அப்படி சிலர் கலந்து கொண்டாலும் இந்த ஊடகவிலாளர்கள் எல்லோரும் கலந்து கொண்டிருப்பார்களா? அப்படி எல்லோரும் கலந்து கொண்டிருந்தாலும் எத்தனை சில மணித்தியலங்களோ சில நிமிடங்களோ கடமை உணர்வை காட்டுகிறோம் என்பதற்காக பங்கு பற்றி இருக்கலாம் என்பது டொரோண்டோ வாழ் தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது.
இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல அவர்களின் முழுமூச்சான பங்களிப்பும் தேச உணர்வும் வீதியோர பங்களிப்பில் தேவைபடுகின்றது. டொரோண்டோ, அமெரிக்கா, ஒட்டவா என்று இடைவிடாது முன்னெடுக்கப்படுகின்ற கவனஈர்புகளில் டொரோண்டோ மக்களே ஓடி ஓடி பங்கெடுக்கின்ரர்கள். இதிலிருந்து தெரிவீர்கள் அடுத்த கருத்து பகிர்வு ஒட்டவா தமிழ் மக்களின் தேச உணர்ச்சி.
டோரோண்டோவிலிருந்து நாளை செவ்வாய்க்கிழமை ஓட்டாவாவிர்க்கு செல்ல தமிழ், தேச உணர்வாளர்கள் என்று எம் சமூகத்தில் பீத்திக்கொண்டிருந்த பலர் திட்டமிட்டிருப்பார்கள். அவர்களுக்கு ஓர் நிபந்தனை. கடந்த ஏழு நாட்களாக எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் கடும் குளிர் என்ற சிந்தனையே வராமல் இரவு பகலாக ஒட்டவா பார்லிமென்ட் இல் போரடிக்கொண்டிருக்கும் இளையோரை முன்னிறுத்தி நீங்கள் அவர்களுக்கு தேவையான ஆதரவையும் ஒத்துளைப்பையும் மட்டுமே செய்யுங்கள். அதை விட்டு இனி வரும் நாட்கள் மிக முக்கியமான தருணம் என்று உங்கள் முகத்தை முன்காட்டி பெயர் எடுத்து குளிர்காய நினைக்காதீர்கள். நன்றி வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment