Sunday, May 3, 2009

எந்த பாரதி எழுதிய பாடல்? தெரியவில்லை. ஆனால் இதுதான் இன்று உண்மை நிலை. அவல நிலை


ஈழத்துப் பாப்பா பாடல்
ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா
சிங்களப் படைகள்வரும் பாப்பா -
வானில் சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் -
மனிதர் எவரும் இல்லையடி பாப்பா
சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா -
எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -
எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா
பகைவனுக்கு வேண்டியது சண்டை -
அவன் வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் -
பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா
தெய்வமும் மறந்ததடி பாப்பா -
வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா -
இன்று பேய்களின் ஆட்சியடி பாப்பா
யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா -
குண்டின் சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா
- நாம் மொத்தத்தில் பாவிகளடி பாப்பா
காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ -
நாம் நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா -
நம் தலைவிதி இதுதான் பாப்பா

No comments:

Post a Comment