Tuesday, May 5, 2009

கனடாவில் இருந்து ஒரு சகோதரரின் வேண்டுகோள்

எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ் உணர்வாளர் அண்ணன் திருமாவளவன் அண்ணா,எங்களுக்கு விளங்கும் அரசிலில் யாரையும் நம்பமுடியாது என்று. இருப்பினும் காலாகாலமாக கலைஞரை நம்பி ஏமாந்து விட்டோம். இனியும் அவரை நம்ப முடியாது. அவர் 'ஒன்றும் என்னால் செய்யமுடியாமல் இருக்கிறது காங்கிரஸின் முடிவை மீறி' என்று சொன்னாலும் பறவாயில்லை, ஆனால் அவரோ கண்ணுக்கு முன் தெரியும்படியாக நாடகம் ஆடுகிறார். இது என்னொரு வகையில் காங்கிரஸ் தமிழினத்துக்கு செய்யும் அநியாயங்களையும் அழிப்புகளையும் மூடிமறைத்து அவர்களுக்கு இன்னும் வழியமைத்துக்கொடுக்கின்றார். தலைவர் எம். ஜி. ஆர் தமிழனை தலை நிமிர்ந்து நடக்கச்செய்தார் ஆனால் கலைஞரோ காங்கிரசுக்கு முன்னால் தமிழனை தலை குனிந்தது நிற்கச்செய்வதோடு, தமிழினம் இலங்கையில் இப்போ அழிந்துபோகக்கூடிய நிலைமைக்கு காரணமாக இருக்கின்றார்.இப்போதைய நிலையில் ஜெயலலிதா அம்மையாரின் தலைமையை தமிழகம் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டது. வெளிநாட்டவர்களாகிய எங்களுடைய முழு விருப்பம் தமிளுணர்வாளராகிய உங்களின் பெயர் காங்கிரஸ் என்னும் தமிழ் அழிப்புக்காரர்கள் கூட்டணியில் சரித்திரத்தில் நிரந்தரமாக பதிபட்டுவிடக்கூடாதென்பதுதான். தி. மு. கா. கலைஞர் கூட்டணியில் இருந்து விலகி சரித்திர நாயகர்களில் ஒருவராக தமிழினத்தை காப்பாற்ற பாடுபடுங்கள். நெடுமாறன் ஐயாவுக்கு உறுதுணையாக இருங்கள். அன்புடனும் உரிமையுடனும் கேட்பது துரோகிகளுக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காதீர்கள்.
நன்றி உங்கள் அவசர நடவடிக்கையை எதிர்பார்த்து,

No comments:

Post a Comment