Friday, May 15, 2009

எழுந்து நில் துணிந்து செல்.

இறுதிபோர் . நமக்கு நம் ஈழம் தமிழ் ஈழம் மலரும் காலம் நெருங்கி விட்டது. 2010 நம் தமிழ் ஈழம் நம் கையில் இருக்கும். இனிமேல் தான் நாம் எச்சரிகையாக இருக்க வேண்டும். ஒரு குருசேத்திரம் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் தர்மம் தோற்றதாக வரலாறு இல்லை. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும். ஒரு சிறந்த தலைவனை பெற்ற நாம் எப்போதும் கவலைபடக்கூடாது. ஆனால் இப்போது நம் இனம்? அழிகிறான். அழிகிறான். கருவிலயே அழிகிறான். இருப்பவர்களை மன நோயாளிகள் ஆகின்றனர். எதிரி நினைப்பது நடக்கக்கூடாது. வந்தேறிய குடி அவர்கள். நாம் அல்ல. இனி புலம் பெயர்ந்து வாழும் எமக்கு நிறைய வரலாற்று கடமைகள் இருக்கிறது. நமது தேசத்தை கட்டி எழுப்பும் பணி நிறைய இருக்கிறது. நிறைய வழிகளில் இருக்கிறது. இப்போது அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டும. அதற்கு முதல் நாம் நமது இளையோருக்கு துணையாக நின்று போராட்டங்களில் பங்கு கொள்ளவேண்டும். ஓன்று படு தமிழா ஓன்று படு வெட்டி பேச்சு பேசும் நேரம் அல்ல இது நமக்கு நாம் தலைவன் ஒரே நாம் தலைவன்.இங்கு தலைமை போட்டிகள் தேவை இல்லை. நாம் நம் தலைவர் சொல்வதை செயல் வடிவத்தில காட்டும் பணியில் இறங்க வேண்டும். அதுவே நமது கடமை.

No comments:

Post a Comment