Monday, May 18, 2009

தர்மம் மறு படியும் வெல்லும்

உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள்இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு
எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு துளி ரத்தமும் வீணாகாது. வீண் போகக்கூடாது. உயிரை துறக்கும் போதும் உணர்வோடு மண்ணில் விழுந்த கண்மணிகளே மாவீர தெய்வங்களே உங்கள் ஆத்மாக்களும் போரிட்டு நம் இனத்தை காக்கும்.
துரோகிகளின் கைகளில் நாடு போவதை அதிகாரம் போவதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. இன்றே பார்த்துவிட்டோமே. எப்படியெல்லாம் ஆட்டம் போடுது அரக்கர் கூட்டம் என்பதை. எத்தனை பெண்களை காணவில்லை எத்தனை கடத்தல் எத்தனை கொள்ளை இறைவா துரோகிகளிடம் இருந்து எம் இனத்தை காப்பாற்று எதிரிகளை தலைவர் பார்த்து கொள்ளவார்.
தீயவர்களை சூழ்ச்சியால் வெல்லும் உத்தியை காட்டி தந்தான் பரந்தாமன்எம் தலைவா எமக்கு எல்லாமும் நீ தான். உன் விஸ்வ ரூபதிர்க்காக தான் நம் இனம் காத்துக்கொண்டு இருக்கிறது.
கௌரவரோ நூறு பாண்டவரோ ஆறு (கண்ணனோடு சேர்த்து) எத்தனை பெரிய முதலைகள் இருந்தாலும் வெற்றி என்றும் நீதிக்கே
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறு படியும் வெல்லும்.

No comments:

Post a Comment